
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை நீண்ட நாட்களாக நிலவிவருகின்ற நிலையில், அண்மை காலமாக அதிகளவான கால்நடைகள் இறந்து வருகின்றன.
மன்னார் மாவட்ட செயலகத்தால் மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட பல ஏக்கர் நிலங்கள் பல்வேறு அரச திணைக்களங்களினால் இதுவரை விடுவிக்கப்படாத நிலையும் காணப்படுகிறது.
மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாயாற்றுவெளி பகுதியில் அதிகளவான கால்நடைகள் மேய்ப்பதற்காக கொண்டு செல்லப்படுகின்ற நிலையில், சீரற்ற காலநிலை, அதிக பனி காரணமாகவும் அதிகளவான கால்நடைகள் இறக்கின்றன.
அதேநேரம், அதிகளவான மாடுகள் ஒரே பகுதிகளில் தொடர்ந்தும் மேய்வதால் அங்கு புற்கள் இல்லாத நிலையில், பட்டினியால் உடல் மெலிந்து கால்நடைகள் இறந்துள்ளமையையும் காணமுடிகிறது.
இதன்காரணமாக கால்நடை வளப்பாளர்கள் வாழ்வாதரத்தை இழக்கும் நிலை தொடர்கிறது.