NewsReligionSrilanka News

மதுபானக் கடைகள் மூன்று நாட்களுக்கு பூட்டு!

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை (03 நாட்கள்) மூடுமாறு இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


மே மாதம் 12 ஆம் திகதி வரும் வெசாக் பௌர்ணமி போயா தினத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, மே மாதம் 11 ஆம் திகதி இரவு, மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் நேரத்திலிருந்து மே மாதம் 15 ஆம் திகதி திறக்கப்படும் நேரம் வரை நாட்டிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என்று மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்தக் காலகட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு பெரிதும் உதவியாக அமையும்.


இதற்காக, 1913 என்ற இலக்கத்தினூடாகவும், 0112877688 என்ற தொலைநகல் மூலமாகவும், oicoptroom@excise.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவும், நாடு முழுவதும் அமைந்துள்ள கலால் அலுவலகங்கள் மற்றும் விசேட கண்காணிப்புப் பிரிவுகளுக்கு முறைப்பாடுகளை வழங்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button