JaffnaNewsSrilanka News
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்றிரவு(29) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால், இரண்டு லட்சம் ரூபா சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
யாழ். சாவகச்சேரி நகரசபை வளாகத்தில் வைத்து விசேட பொலிஸ் பிரிவால் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று(29) கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 20 ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இராமநாதன் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.