
யாழ்.குருநகரில் வீசிய பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தை அமைச்சர் சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இன்று காலை வீசிய பலத்த காற்றால் 30 ற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும், புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.
அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உடனடி உதவுகளை வழங்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார்.