
முள்ளிவாய்க்கால் வார நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் தென்மராட்சி பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் யாழ்.சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று(14) இடம் பெற்றது.

இதன் போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் பொது அமைப்புகளின் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
