NewsReligionSrilanka News
கண்ணீரால் கரைந்தது முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று(18) நடைபெற்றது.
ஆரம்பத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் சார்பாக தென்கயிலை ஆதீன குரு முதல்வரால் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றிவைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டன.
உயிர்நீத்தவர்களின் உறவுகளின் கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றமே நனைந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வருகைதந்த உயிரிழந்தவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.