
யாழ்.கோப்பாய் பிரதேசத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறியும் நோக்கோடு, தேசிய மக்கள் சக்தியின் மக்கள் குறைகேள் சந்திப்பு இன்று(19) நடைபெற்றது.
இந்த சந்திப்பில், பிரதேச மக்களின் வாழ்வாதாரத் தேவைகள், கல்வி, வேலை வாய்ப்பு, நீர்ப்பாசனப் பிரச்சினைகள் மற்றும் விவசாயம் தொடர்பான அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் நேரடியாக சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.