
தேசிய தைப்பொங்கல் விழா, யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நேற்று(18) இடம்பெற்றது.
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் பொங்கல் நிகழ்வுகள் காலை 7.30 மணியளவில் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.
விருந்தினர்கள் கலாசாரமுறைப்படி வாத்தியக் கருவிகள் முழங்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

புத்தசாச மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹனிதும சுனில் செனவி, கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர்களான மகிந்த ஜெயசிங்க, சுந்தரலிங்கம், பிரதிப், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஶ்ரீபாவனந்தராஜா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, சைவநெறிச்சுடர் என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.சபைக்கு விருந்துதரும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
