World

கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்-சோமாலியாவில் மீன்பிடி படகுகளை கடத்திச் சென்றனர்!

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 2011-ம் ஆண்டு கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் செய்து வந்தனர். அந்த ஆண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பதிவாகின. இதனால் சர்வதேச வணிகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இதனையடுத்து சர்வதேச கடற்படையின் ரோந்து பணியால் கடற்கொள்ளையர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் அங்குள்ள ஈல் கடற்பகுதியில் ஏமனுக்குச் சொந்தமான 3 மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தன. அவற்றை குறிவைத்து கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். எனவே அதில் இருந்த மீனவர்கள் வேறொரு படகு மூலம் தப்பி கரையை அடைந்தனர். அதேசமயம் 3 கப்பல்களையும் கொள்ளையர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ஐரோப்பிய கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button