
“பொங்கு தமிழ்” பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று(17) இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபி முன்பாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்த நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.
இதன்போது பொங்கு தமிழ் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும் என பொங்குதமிழ் பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொங்கு தமிழ் பிரகடன 24 ஆவது ஆண்டு எழுச்சி நாள் யாழ். பல்கலையில்! https://tamilinfo.net/pongu-tamil-proclamation-24th-annual-uprising-day-at-jaffna-university/
Posted by தமிழன் செய்திகள் on Friday, January 17, 2025