சீனாவிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நேற்றிரவு(17) நாடு திரும்பினார்.

இந்த விஜயத்தின் போது கடந்த 15 ஆம் திகதி சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு சீனா மக்கள் மண்டபத்தில் இடம்பெற்றது.
அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

மேலும் அன்றைய தினம் சீன பிரதமர் லீ சியாங்கை சந்தித்து கலந்துரையாடினார்.
வளமான நாடு அழகான வாழ்க்கை உருவாக்குவதற்கு சீரா ஆதரவளிக்கும் என இதன்போது சீன பிரதமர் உறுதி அளித்திருந்தார்.

மேலும், சீனாவின் முன்னணி அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்தித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன் சீன தேசிய காங்கிரஸின் நிலை குழுவின் தலைவர் ஜாவோ லெஜியை சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்றைய தினம்(17) காலை சீன கம்யூனிச கட்சியின் சிச்சுவான் மாகாண செயலாளரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.