
மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று(31) அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் மாவட்டபுரத்தில் அமைந்துள்ள அமரர் மாவை சேனாதிராஜாவின் இல்லத்திற்கு சென்று ஜனாதிபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி இன்று மதியம் இந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
