Srilanka News
ஜனாதிபதி செயலக வாகனங்கள் ஏலத்தில் விற்பனை!

இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகனங்கள் இன்று(15) ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
ஏலத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக சொகுசு வாகனங்கள் மற்றும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
அனைத்து வாகனங்களும் 10 வருட காலத்திற்குள் தயாரிக்கப்பட்டவையாகும்.
அரச செலவை குறைக்கும் நோக்கிலேயே இந்த வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன.
இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பயன்படுத்தியவை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.