நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய 158 உறுப்பினர்கள் இணக்கம் – பிரதமர் தெரிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய அரசாங்கத்தின் 158 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயகவால் உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது குறித்து தனிப்பட்ட உறுப்பினர் யோசனையை முன்வைத்து உரையாற்றியதற்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
“நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் குறைக்கப்படுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது போன்றவை தொடர்பாக நாம் 2001 ஆம் ஆண்டில் இருந்தே கதைத்துள்ளோம். நான் சந்தோஷப்படுகின்றேன் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று அந்த யோசனையை முன்வைத்தமைக்காக! நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் இந்த யோசனைக்கு இணக்கம் தெரிவிக்கின்றோம்.
ஆனால் நாம் ஆதங்கப்படுகின்றோம். சகலரும் இணங்க வேண்டிய யோசனைக்காவது எதிர்க்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் பாரம்பரியத்தை மாற்றுவதற்கு இணக்கம் இல்லை என்பது குறித்து.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக முன்வைத்த யோசனைக்கு ஆதரவாக மேலும் அவர்கள் இந்த வரப்பிரசாதங்கள் குறைக்கப்படுவதற்கு கதைக்காது வேறு தலைப்புத் தொடர்பாக இன்னும் அந்த உறுப்பினர்கள் கதைக்கின்றார்கள்” என்றார்.