யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு 20 மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டன.
தாளையடி நன்னீர் திட்ட சமாசத்தில் இதற்கான நிகழ்வு இன்று(09) இடம்பெற்றது.
குறித்த நிறுவனம் 40 தொழிலாளர்களுக்கு படகுகள் வழங்கவுள்ள நிலையில், இன்றைய தினம் முதற்கட்டமாக 20 மீன் பிடிப் படகுகளை வழங்கியது.
வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்திற்குட்பட்ட துணை சங்கங்களின் 20 தொழிலாளர்களுக்கே இந்தப் படகுகள் வழங்கப்பட்டன.