NewsSrilanka News

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மதியத்துக்குப் பின் மழை!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (22) மதியம் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவுக்கு ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button