News
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான பரிந்துரை அடுத்த வாரம் வெளிவரும்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), மின்சாரக் கட்டணத்தை 18.3% அதிகரிக்கும், இலங்கை மின்சார சபையின் திட்டத்திற்கான தனது பரிந்துரைகளை அடுத்த வாரம் வெளியிடவுள்ளது.
கடந்த வியாழக்கிழமை வரை பொதுமக்கள் கருத்துக்களை ஒன்பது மாகாணங்களிலிருந்து சேகரித்தது.
பொது முன்மொழிவுகள், இலங்கை மின்சார சபையின் சமர்ப்பிப்பு மற்றும் மின்சார உற்பத்தி செலவுகள் குறித்த அறிக்கைகளை மதிப்பிட்ட பிறகு, PUCSL தனது பரிந்துரையை வழங்கும்.
ஆய்வு தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.