NewsSrilanka News
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை நாடாளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்துள்ளார்.
அரச உர உற்பத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பியகம பட்டலந்த வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளுக்குள் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்தமை அல்லது காணாமலாக்கியமை தொடர்பாக விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் கண்டு பரிந்துரை செய்வதே இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும்.