NewsSrilanka News
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு!

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய இந்தியாவிலிருந்து இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த பருவமழை காலத்தின் உள்ளூர் உப்பு உற்பத்தியில் ஏற்பட்ட தாக்கத்தைத் தொடர்ந்தே உப்பு இறக்குமதிக்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.