NewsPoliticsSrilanka News
சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஏழரை மணிநேர வாக்குமூலம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ சுமார் ஏழரை மணிநேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியுள்ளார்.
நேற்று (05) காலை 9 மணியளவில் அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
சீன நிறுவனத்திடம் இருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இடம்பெற்றுவரும் விசாரணைகளுக்கு அமைவாக அவருக்கு வாக்குமூலம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.