கோவையில் சீமான் தலைமையில் மே 18 நினைவேந்தல்!

இந்திய தமிழகம் கோவையில் (Coimbatore) மே 18 தமிழினப் பேரெழுச்சி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்ட நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று(18) இடம்பெற்றது.
இந்த மே 18 பேரெழுச்சிக் கூட்ட நினைவேந்தலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சீமான், “வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அடிமையாக நாம் வாழந்துகொண்டு இருக்கின்றோம்.
தமிழ் தேசிய மக்கள் நமக்கென்று குரல் எழுப்ப ஒருத்தர் இல்லாமல் தற்போது போராட்ட சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இருந்தாலும், தமிழீழத்தையும் தமிழையும் மேலும் வலுவாக வளர்த்து வருகின்றனர் நம் தமிழ் மக்கள், அதனை மீட்டு அவர்கள் கையில் தர உதித்த தலைவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
தமிழ் தாயின் வரலாற்றில் மாபெரும் தலைவராக பிறந்த எம் தலைவர், அனைத்து தமிழ் மக்களும் வாழ வேண்டும் என நினைத்தமையால் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்” என்றார்.