
யாழ். நாவற்குழியில் அமைந்துள்ள சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தெட்சணாமூர்த்தி திருக்கோயிலின் சிவராத்திரி தின விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்று வருகின்றன.
பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதோடு நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றி வருகிறார்கள்.
ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கேணியில் நீரை ஏந்தி வந்து 108 சிவலிங்கங்களுக்கும் ஊற்றி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.