NewsSrilanka News
கொழும்பு நினைவேந்தலில் சிலர் குழப்பம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி கொழும்பு- வெள்ளவத்தையில் நேற்று(18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் சிலர் குழப்பம் விளைவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளவத்தை அலெக்சாஏண்டர் வீதிக்கு எதிரேயுள்ள கடற்கரைக்கு அருகில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சிலர் குழப்பங்களை விளைவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிஸாரின் பாதுகாப்புடன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு, இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்துக்கொண்டிருந்தார்.