Jaffna

யாழ்.நூலகத்தில் இடம்பெற்ற பெண்களுக்கான விசேட சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய கிளையின் ஒருங்கிணைப்பில்  யாழ். பல்கலைக்கழக சட்டத் துறையுடன் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றம்” என்ற தொனிப் பொருளிலான கருத்துப்பகிர்வு இன்று(11) யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப் பாளர் த.கனகராஜ் தலைமையில் ) கருத்தாய்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத்  தலைவர் சட்டத்தரணி கோசலை மதன், சட்டத்தரணி புராதனி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றியிருந்தனர்.

குறித்த நிகழ்வில் பால் நிலை சமத்துவம், பெண்களின் அரசியல் பிரதித்துவம், சமூகத்தில் சமவாய்ப்பு, பெண்களுக்கான விஷேட சட்டவாக்கம், குடும்ப வன்முறைச் சட்டம், தேசவழமைச் சட்டம்,உள்ளூர் அதிகார சபைகளில் பெண்களின் வகிபாகம், தொழில் உரிமை, மகப்பேற்று காலச்சட்டம், அரசியல் அமைப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு, சமூக ஊடகங்கங்களின் தக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக  ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில்  மனித உரிமைகள் ஆணைக் குழுவின் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பா ட்டாளர்கள், மகளிர் அமைப்பின் பிரதி நிதிகள் பொஸிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button