News
இலங்கை தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுகம்!

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு சாவகச்சேரி ஐங்கரன் மணிமண்டபத்தில் நேற்று(23) சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளைத் தலைவர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சாவகச்சேரி தொகுதிக்கிளைக்குட்பட்ட நகரசபை மற்றும் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டு தம்மை அறிமுகம் செய்திருந்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகத்தினர்,உறுப்பினர்கள்,கட்சித் தொண்டர்கள்,நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.