NewsSrilanka NewsWeather
இலங்கை, இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 km வேகத்திலும், இடைக்கிடையே 55 km வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடுமென இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபுக் கடற்பிராந்தியத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சாத்தியமுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும்.
இதனால் தமிழகத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.