சிங்கப்பூருக்கு பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தோனேசியாவில் தரையிறக்கம்!

கொழும்பிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL306, நேற்று (05) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் பழுதுபார்ப்புக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டதால், 93 பயணிகளும் எட்டு பணியாளர்களும் மேடன் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மேடன் விமான நிலையத்தில் கடுமையான குடியேற்ற நடைமுறைகள் காரணமாக பயணிகளை ஹோட்டல்களுக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், தங்குமிடம் வழங்கப்படும் வரை அனைத்து பயணிகளும் கவனித்துக் கொள்ளப்படுவதை விமான நிறுவனம் உறுதி செய்தோம்.
தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற உதவிய கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகம் மற்றும் ஜகார்த்தாவிலுள்ள இலங்கை தூதரக ஊழியர்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
எதிர்பாராத இந்த தொழில்நுட்பக் கோளாறால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். UL302 என்ற நிவாரண விமானம் இன்று பிற்பகல் 2:24 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டது. அவர்களை விரைவில் அவர்களின் இலக்கை அடைய விமான நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தரையிறக்கப்பட்ட விமானத்தை பழுதுபார்ப்பதற்காக இன்று(06) அதிகாலை கொழும்பிலிருந்து ஒரு பொறியியல் குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.
எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மிக உயர்ந்த முன்னுரிமை என்பதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வலியுறுத்த விரும்புகிறது” என்றார்.