JaffnaSrilanka News
தையிட்டி விகாரையை அகற்றக்கோரி போராட்டம் ஆரம்பம்!

யாழ்.தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள “திஸ்ஸ ராஜமகா விகாரை” யை அகற்றக்கோரி இன்று(11) பிற்பகல் முதல் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.
விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள், பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று(11) பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமாகிய போராட்டம் நாளை மாலை 6.00 மணிவரை இடம்பெறவுள்ளது.