JaffnaNews

தேசிய ரீதியில் சாதனை படைத்த வட்டு இந்துவின் மாணவர்கள் கௌரவிப்பு!

தேசிய ரீதியில் இடம்பெற்ற ‘இளம் விவசாய விஞ்ஞானி’ போட்டியில்,யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலிருந்து போட்டியிட்டு தங்கப் பதக்கம் வென்ற (gold medal) மாணவர்களைக்  கெளரவிக்கும் நிகழ்வு நேற்று(05) இடம்பெற்றது.

வட்டு இந்துவின் முதல்வர் லங்கா பிரதீபன் தலைமையில், கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் இந்த கெளரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில், கல்லூரியின் பழைய மாணவரும், ரட்ணம் பவுண்டேஷன் ஸ்தாபகருமான கலாநிதி ரட்ணம் நித்தியானந்தன், விவசாய போதனாசிரியர் ரமேஷ், ஆசிரிய ஆலோசகர் அருந்தவம்,வடமராட்சி களக்கற்கை நிலைய முகாமையாளர் கோகுலராஜன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஐந்து மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை,இந்த மாணவர்களுக்கான தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button