World

திடீர் சோதனை-இங்கிலாந்தில் இந்திய விடுதியிலே சோதனை நடத்தப்பட்டது!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் 104 இந்தியர்கள் ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்காவை போல இங்கிலாந்தில் சட்ட விரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப் படுகிறார்கள். இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய  விடுதிகளில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியர்கள் நடத்தும் உணவகங்கள்,  மதுபாணசாலை மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடத்தப் பட்டது. அங்குள்ள இந்தியர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்திய உணவகத்தில் நடந்த சோதனையில் 7 இந்தியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இது தொடர்பாக உள்துறை செயலாளர் யுவெட்டே கூப்பர் கூறும் போது, கடந்த தை  மாதம் 828 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 609 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். உணவகங்கள், தேனீர்சாலை , புகையிலை தொழிற்சாலை உள்ள இடங்களில் தான் சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சுமார் 19 ஆயிரம் வெளிநாட்டு குற்றவாளிகள் மற்றும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படும் கானொலியை  இங்கிலாந்து அரசு முதன் முறையாக வெளியிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button