
சுவிட்சர்லாந்தை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக தெரிவித்து சுவிட்சர்லாந்தை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக கருத்துரைத்துள்ள சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான மாகாணச் செயலக இயக்குநரான ஹெலன் பட்லிகர் ஆர்டிடா,”சுவிட்சர்லாந்து, “positive balance of trade” என்னும் நிலையிலிருப்பதாலேயே அமெரிக்கா சுவிட்சர்லாந்தை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
அதாவது, இறக்குமதிக்காக செய்யும் செலவைவிட, ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் பெறுகிறது என்று அர்த்தம்.
இருப்பினும், நியாயமற்ற வர்த்தகம் செய்வதாக சுவிட்சர்லாந்தை குற்றம் சாட்டமுடியாது” – என்றார்.