
ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், பட்டய கற்கை(Diploma) மற்றும் சான்றிதழ் கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் யாழ். சரஸ்வதி மண்டபத்தில் இன்று(01) நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பேராசிரியர் தி.வேல்நம்பி, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் எஸ்.நித்தியரூபன், நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கற்கை ஆங்கிலக் கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்த 265 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
