JaffnaNews

ஆறாவது உடற்கட்டமைப்பு ஆணழகன், பெண்ணழகிப் போட்டிகள் யாழில் நடந்தேறின!

யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது  வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன்(Body building) மற்றும் உடலமைப்பு பெண்ணழகிப்( Women physique) போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு(28) இடம்பெற்றன.

யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தின் தலைவர் பொ.நந்தகுமார் தலைமையில் இந்த போட்டிகள் இடம் பெற்றன.

வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனுக்காக இடம் பெற்ற போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சத்தியசீலன் பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்று வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை மன்னார்  TSP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட லியோன் ஜோயல் பெற்றுக்கொண்டார்.

மூன்றாம் இடத்தை வவுனியா JRP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சுகுமார் ரன்சித்குமார் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை,  வட மாகாண  உடலமைப்பு  பெண்ணழகிகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜோசப் ஜோன்சன் தவச்செல்வி வட மாகாண உடலமைப்பு  பெண்ணழகியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில்,இரண்டாம் இடத்தை நியூ கெல்த் பிற்னஸ் சார்பாகப் போட்டியிட்ட மோனிஷா மகேந்திரராஜா பெற்றுக் கொண்டார்.

மூன்றாவது இடத்தை நோத் சென்ரர் உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜெயவாணி ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button