EventsJaffnaNews

தமிழ்ப் பல்கலையும்,தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடாத்திய வட மாகாணத்தின் 8 ஆவது பட்டமளிப்பு விழா!

தமிழ் இணைய கல்விக்கழக வடமாகாண இணைப்பாளரும், முதன்மை விரிவுரையாளருமான க.ரஜனிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி மயில்வாகனம் இரகுநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வைத்தார்.

மேலும் நிகழ்வில், தமிழ் இணையக் கல்விக் கழக விரிவுரையாளர்களான சி.இளந்திரயன், க.முருகதாஸ்,பிரெஞ்சு மொழி விரிவுரையாளர் துஷ்யந்தி ரஜனிகாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது 133 பேர் பட்டங்களையும், 38 பேர் மேற்பட்டய சான்றிதழ்களையும், 34 பேர் பட்டய சான்றிதழ்களையும் பெற்றனர்.

முதல் நிலையுடன் சிறப்பு தேர்ச்சி பெற்ற 11 மாணவர்கள் “இராஜராஜ சோழன் விருது” வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, ஆங்கிலம்,பிரெஞ்சு மற்றும் டொச் ஆகிய மொழிகள் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button