அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க” – நூல்வெளியீடு!

டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய “அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க” என்ற நூல் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதன் போது தலைமை உரையை தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் நிகழ்த்தினார். நூல் விமர்சனத்தை மூத்த பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணர் நிகழ்த்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீட்டை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் வெளியிட்டு வைக்க மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்தும் நிகழ்வில் சட்டத்தரணி மற்றும் சமூக, அரசியல் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம், பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் ஆகியோரும் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.