JaffnaNewsSrilanka News
க.பொ.த. சாதாரண தர பரீட்சை மார்ச் 17 இல் ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை சாதாரண தர பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1911, 0112784208, 0112784537, 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும்” – என்றார்.