NewsSrilanka News

பொலிஸாரின் சட்டவிரோத சோதனை; கதிர்காம ஆலய பஸ்நாயக்க நிலமே குற்றச்சாட்டு!

முறையான தேடுதல் உத்தரவு இல்லாமல் தனது  வலுக்கட்டாயமாக சோதனை செய்ததாக கதிர்காம ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக திஷான் குணசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று(10) (சிஐடி) வருகைதந்திருந்தார்.

வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,” மாத்தறை – மாலிம்படவிலுள்ள தனது வீட்டிற்குள் சிவில் உடையில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள்  நுழைந்தனர்.

அங்கு எனது 84 வயது தாயாரும் ஒரு தொழிலாளியும் வசிக்கின்றனர்.

எனது வீடு சோதனையிடப்பட்டதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும், தேவையான ஆவணங்கள் இல்லாத அதிகாரிகள் மற்றொரு நபரின் சொத்துக்களில் நுழைந்து வயதான உறவினர்களுக்கு இடையூறு விளைவிப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது”- என்றார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அழைப்பின் பேரில் இன்று முற்பகல் 11 மணியளவில் திணைக்களத்திற்கு வந்த திஷான் குணசேகர சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button