யாழ்ப்பாணம் பலாலி வீதி – தெற்கு புன்னாலைக் கட்டுவன் சந்தியில் இடம் பெற்ற வீதி விபத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று முன்தினமிரவு (08) சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.
சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தி இந்த விபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். உயிரிழந்தவர் ஏழாலை வடக்கு பகுதியச் சேர்ந்த 59 வயதுடைய சங்கரப்பிள்ளை ஜெயசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
உயிரிழந்தவரின் மகன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினமிரவு வந்துள்ளார்.மகனை ஏற்றுவதற்காக தந்தை இரவு 11:30 மணியளவில் பலாலி வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.
இதன் போது அதிக வேகமாக மது போதையில் வாகனத்தை செலுத்திய ஹயஸ் வாகனத்தின் சாரதி குறித்த நபரை மோதித் தள்ளியதில் அவர் 50 மீற்றர் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.
அவரது உடல் வாகனத்தின் பவருக்குள் சிக்குண்ட நிலையில், பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் சடலத்தை மீட்டிருந்தார்.
சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
வதிரி பகுதியைச் சேர்ந்த குறித்த சாரதியை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(09) முற்படுத்திய போது அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் சுபராஜினி ஜெகநாதன் உத்தரவிட்டிருந்தார்.