
தையிட்டி விகாரையை அகற்றக்கோரி போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளை ஒன்று போராட்ட களத்துக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய திகதி(11) இடப்பட்ட அந்தக் கட்டளையில்,” பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தையிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள “திஸ்ஸ ராஜமகா” பௌத்த விகாரை முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மற்றும் காங்கேயர் பொன்னம்பலம் ஆகியோரினாலோ, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களாலோ, வழிபாட்டு இடத்திலோ அல்லது பிரதான நுழைவாயிலோ அல்லது வழிபாட்டுக்குவரும் மக்களுக்கோ அல்லது விகாரையில் நடைபெறும் உற்சவத்திற்கோ இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

மேலும்,விகாரையின் உடைமைகளுக்கு சேதங்கள் ஏற்படுத்தக் கூடாது.
அத்தோடு, 2025.02.11 ஆம் திகதியில் இருந்து 2025.02.12 ஆம் திகதி வரை சட்டவிரோத ஆர்ப்பாட்டமோ அல்லது சட்டவிரோத ஊர்வலமோ அல்லது சட்டவிரோத கூட்டமோஎந்த விதத்திலும் தடை செய்யக்கூடாது” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.