
தேசிய மக்கள் சக்தியின் மேலுமொரு பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம் கோப்பாயில் நேற்று (03) திறந்து வைக்கப்பட்டது.
கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.