பயிற்சி குழுவினரின் பதவிக்கும் ஆபத்து…மோர்க்கலை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய கம்பீர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீருக்கும் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்க்கலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.பிசிசிஐ சில ஆண்டுகளாக உள்நாட்டு பயிற்சியாளர்களையே அணியில் நியமிக்கும் முடிவை எடுத்தது.
ஆனால் இந்த நடைமுறையை கம்பீர் வந்த பிறகு மாற்றினார். தமக்கு மோர்னே மோர்க்கல் தான் வேண்டும் என்று அவர் அடம் பிடித்தார். அதேபோன்று நெதர்லாந்து வீரர் டோஷெட் மற்றும் அபிஷேக் நாயர் போன்ற வீரர்களும் பயிற்சி குழுவில் இடம் பெற வேண்டும் என்று நம்பி வலியுறுத்தினார்.

இதனை அடுத்து கம்பீரின் கோரிக்கைக்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் பயிற்சியாளர் கம்பீருக்கும், மோர்னே மோர்க்கலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பயிற்சி செய்து கொண்டிருந்த போது மோர்க்கல் தாமதமாக மைதானத்திற்கு வந்திருக்கிறார். இதனால் கடும் கோபம் கொண்ட கம்பீர் மோர்க்கலை மைதானத்தை விட்டு அனுப்பி அவருக்கு அபராதம் விதித்திருக்கிறார். இது மோர்க்கல் மனதில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது. இதனை தொடர்ந்து மோர்க்கல் கம்பீர் தொடர் முழுவதும் பெரிய அளவு பேசிக்கொண்டது இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதைப் போன்று கம்பீர் பயிற்சி குழுவில் இடம் பெற்றுள்ள ரியான் டென் டோசேட் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோரின் செயல்பாடும் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பேட்டிங் பயிற்சியாளராக செயல்படும் அபிஷேக் , இந்திய வீரர்களின் பேட்டிங் திறனை மேற்கொள்ள எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என தெரிகிறது.

விராட் கோலி தொடர்ந்து ஒரே முறையில் ஆட்டம் இழந்ததை சுட்டிக்காட்டி உள்ள கிரிக்கெட் வீரர்கள், இதனை சரி செய்ய அபிஷேக் நாயர் எந்த முயற்சி எடுத்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோன்று துணை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ரியான் டோசேட் சர்வதேச அளவில் புதிய அனுபவங்கள் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதனால் அவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்றுள்ள அபிஷேக் நாயர் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர பிசிசிஐ யோசித்து வருகிறது.