JaffnaNewsSrilanka News
யாழ்.மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படும் ஜனாதிபதி உறுதி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் (Passport Office) ஒன்று திறக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்திற்கு நேற்று(31) வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ் மாவட்ட செயலகம் மற்றும் மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டு வாரங்களுக்குள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.