மாகாண சபைத் தேர்தலும் விரைவில் – பிரதமர் உறுதி!

மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று(11) விஜயம் மேற்கொண்ட அவர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போதே இதனை தெரிவித்தார்.
06 மாத காலப்பகுதியில் 03 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவது தேர்தலாக மாகாண சபை தேர்தலும் விரைவில் நடாத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
அனைவரையும் பிரதிநிதித்துவப்படும் அரசாங்கமே தற்போது உள்ளது. இம்முறை நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையாக இருக்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்திற்கு மக்களே காரண கர்த்தாக்கள். மக்கள் எமது அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை எதிர்பார்ப்புகளை பேணி பாதுகாத்து நேர்மையாக பொறுப்புடன் பணியாற்றுவதே தமது கடமை” – என்றார்.