வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு பெரும்பான்மையான வாக்குகளால் நேற்று (21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் 114 மேலதிக வாக்குகளால் 3ஆம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் மீதான 3 ஆம் வாசிப்பு தொடர்பான விவாதம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.
7ஆவது நாளாக இன்று நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான 3ஆம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மையான வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.