கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, அரசு ஏற்பாடு செய்துள்ளது.வரும் 30ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை பட்டிமன்றம், கருத்தரங்கத்துடன் 3 நாள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் 30ம் தேதி, மாலை 5:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது.
கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.தற்போது கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
மறுநாள் 31ம் தேதி, திருவள்ளுவர் தோரண வாயிலுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி, வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியருக்கு, பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
பியானோவில் திருக்குறள் இசை நிகழ்ச்சி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.புத்தாண்டு அன்று திருக்குறள் ஓவியக் கண்காட்சி நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ள இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு, எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.