
தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் தண்டனை பெற்ற மூன்று அமெரிக்கர்களின் மரண தண்டனையை கொங்கோ அரசு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.
கடந்த வருடம் கொங்கோவில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க பிரஜைகள் மூவருக்கு எதிராக அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதன்போது ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட 52 பேருக்கும் எதிராக மேலும் வழக்கு தொடரப்பட்டு அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
அவர்களில் 30 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் கொங்கோ அரசாங்கம் அவர்களின் மரண தண்டனையை குறைத்துள்ளதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொங்கோ ஜனநாயக குடியரசு
கடந்த ஆண்டு கொங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் நடந்த ஒரு தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பங்கேற்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட மூன்று அமெரிக்கர்களின் மரண தண்டனையை ஜனாதிபதி பெலிக்ஸ் ஷிசெகெடி இவ்வாறு குறைத்துள்ளார்.
தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்காக இராணுவ நீதிமன்றம் மூவருக்கும் மேலும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கும் மரண தண்டனை விதித்து ஆறு மாதங்களுக்கும் மேலாகியும், ஜனாதிபதி உத்தரவு அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்ட கிழக்கு பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராட கின்ஷாசாவுக்கு உதவும் பாதுகாப்பு ஆதரவுக்கு ஈடாக அமெரிக்காவுடன் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட கொங்கோ அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.