மாவீரர் நாள் 2020

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும்,நடைமுறை ஒழுங்குகளும்

1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட விருக்கின்றன.

தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் ஆரம்பமாகும்.

மாவீரர் நாள் தொடக்க நிகழ்வுகள்

  1. சுடரேற்றல்
  2. தேசியக் கொடியேற்றல்
  3. மலர் வணக்கம்
  4. அக வணக்கம்
  5. உறுதியுரை
  6. நினைவுரை

என்பன வரிசை ஒழுங்கில் மேற்கொள்ளப்படும். தொடக்க நிகழ்வுகள் மாவீரர் எழுச்சி நாட்களான மூன்று நாட்களிலும் நடைபெறும்.

தேசியக் கொடி ஏற்றல்

மாவீரர் எழுச்சி நாட்களுக்கான நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் நாளன்று காலை 8.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகும்.

மாவீரர் துயிலும் இல்லங்களில் 25 ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஏற்றப்படும் தேசியக் கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.

இயக்கப் பணிமனைகள் தளங்களில் முதல் இரண்டு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலை ஏற்றப்படும். நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.

பொது நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின் பகல் 12.01 இன் பின்பாகவும்இ மாலை 6.00 மணிக்கு முன்பாகவும் தேசியக் கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலையில் ஏற்றப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button