
யாழ்.சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவு நாள் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக ‘நகர் வனம்’ மரம் நடுகைச் செயற்றிட்டம் இன்று(28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி புகையிரத நிலையத்திற்கு சொந்தமான நிலத்தில் பாடசாலைப் பழைய மாணவர்களால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

டிறிபேக் கல்லூரியின் அதிபர் பேரின்பநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ‘கிறீன் லேயர்’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பி.சசிக்குமார், கல்லூரியின் பழைய மாணவரும், இயற்கை ஆர்வலருமான வைத்தியர் சி. சசிகரன், டிறிபேக் கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
