
கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட கடற்றொழில் தொடர்பான சட்ட மூல வரைபை தற்போதைய அரசு சட்ட மூலமாக்க முனைகிறது.
வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
பழைய சட்டமூல வரைவையே மீண்டும் கொண்டுவர முனைவு: வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு!
பழைய சட்டமூல வரைவையே மீண்டும் கொண்டுவர முனைவு: வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு!#varnakulasingham#pressmeeting#tamilinfoPosted by தமிழன் செய்திகள் on Thursday, March 13, 2025
அங்கு மேலும் கருத்துரைத்த அவர், “கடந்த அரசின் காலத்தில் அப்போதைய அமைச்சர் குறித்த புதிய சட்ட மூல வரைபை கடற்றொழிலாளர் சங்க அங்கத்வர்களை அழைத்து பிரதிகளை வழங்கினார். ஆனால் அந்தப் பிரதியில் நடுப் பகுதி அச்சிடப்படாமல் விநியோகிக்கப்பட்டது.
அப்போதே மீனவர்கள் அதற்கெ எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்போது அந்தச் சட்டத்தையே புதிய சட்டமாக அரசு நடைமுறைப்படுத்த அரசு முனைகிறது.
1996ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடற்றொழில் சட்டத்தை நடை முறைப்படுத்துங்கள். புதிய சட்ட மூலத்தை நாம் எதிர்க்கிறோம், குறித்த சட்ட மூல பிரதிகளில் என்ன இருக்கிறது என்று இதுவரை மீனவர்களுக்கு தெரியாது.
ஐரோப்பிய நாட்ட்டுப் பிரதிநிதிகளை கூப்பிட்டு கடல்வளத்தை கூறு போட்டு குத்தகைக்கு குடுக்கிற சூழ்ச்சிகளை புதிய அமைச்சரும் அரசும் முன்னெடுக்கிறது. கடலை சீனாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கு தாரைவார்க்க முனைகிறது.
இது வரைக்கும் கடற்றொழில் சங்கம், சமாசம், சம்மேளனம் புனரமைக்கப்படவில்லை, பழைய நிர்றவாகமே இயங்குகிறது. இதனை புனரமைக்க அமைச்சரால் முடியவில்லை.
எமது கடலில் உள்ளூர் இழுவைப் படகுகள், சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.. இதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எமது கடலை அந்நிய நாட்டு மீன்பிடி படகுகள் கபளிகரம் செய்துள்ளன. இன்று சாப்பிட வழியில்லாமல் இருக்கிறோம். பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கிறது” என்றார்.