JaffnaSports

தேசிய கொக்கி அணிக்கு வட்டு.யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் தெரிவு!

தேசிய கனிஷ்ட பிரிவு கொக்கி அணியில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் எஸ்.விதுசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கொக்கி விளையாட்டை விளையாடுகின்ற பாடாசாலைகள் இணைந்து, தேசிய  கனிஷ்ட பிரிவு அணிக்கான வீரர்களை அடையாளம் கண்டு தெரிவு செய்வார்கள்.

இதனடிப்படையில் 50 வருடங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்து சிறந்த ஹொக்கி வீரர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 

இந்த நிலையில் கனிஷ்ட பிரிவு தேசிய கொக்கி அணிக்கு (Junior National Hockey Championship tournament) முதலாவது தடவையாக யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்தும் யாழ். மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஹொக்கி வீரனாக  எஸ்.விதுசன் தடம்பதித்துள்ளார்.

இதேவேளை, இடம்பெற்றுவரும் சுற்றுபோட்டியில் இதுவரை விதுசனால் ஒரு கோல் பதிவு செய்யபட்ட நிலையில் குறித்த மாணவன் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button